Thursday, August 21, 2008

Setu project alternative alignment; experts' committee meet on 22 Aug. 2008

Let us hope that the Pachauri Committee will conduct its deliberations honestly and with transparency fully involving the public and all experts. Surely, the Committee should have the freedom to recommend scrapping the channel project and find alternatives to improve the livelihood of coastal people and use container-rail-road coordination alternatives.

kalyanaraman

Setu project alternative alignment: experts’ committee meet today (Aug. 22, 2008 ) – Dinamalar, Tamil daily

Following upon Supreme Court suggestion to examine the feasibility of an alignment for Setu channel project between Rameshwaram and Dhanushkodi, Pachauri committee is meeting today to examine it. Chief Justice of SC, K. Balakrishnan had advised that the review of the possibility of realigning the channel alignment. Consequently, Govt. of India had appointed the Pachauri Committee.to examine the CJ’s suggestion.
The committee headed by Pachauri was appointed. A review meeting of this Committee will take place today.

Addl. Secretary of Shipping Ministry, Rajesh Shrivatsava, Chennai Port Trust Chairman Suresh met with the Committee Chairman and the three of them discussed the issue.

The Committee is expected to analyse and decide after reviewing the feasibility of an alternative alignment between Rameshwaram and Dhanushkodi. When the Committee was constituted no time limit was set for completing the investigations by and recommendations of the Committee. Reliable sources, however, inform that the Committee is likely to submit its recommendation on the feasibility of the alternative alignment within a month or two.

Our Delhi Correspondent.

சேது சமுத்திர திட்ட மாற்றுப்பாதை : நிபுணர் குழு இன்று ஆலோசனை
ஆகஸ்ட் 22,2008,00:00 IST

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் அளித்த யோசனையை அடுத்து தனுஷ்கோடிக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் மாற்றுப் பாதை அமைக்க முடியுமா என்பது குறித்து, ராஜேந்திர பச்சவ்ரி தலைமையிலான நிபுணர் குழு இன்று கூடி ஆலோசனை செய்கிறது. சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவதற்கு சாத்தியங்கள் உள்ளதா என்பது குறித்து ஆராயும்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, ஒரு நிபுணர் குழுவை அமைத்து தலைமை நீதிபதி யோசனை குறித்து ஆராய்ந்து, தனது கருத்தை சொல்வதாக மத்திய அரசும் தெரிவித்திருந்தது.

இதற்காக, ராஜேந்திர பச்சவ்ரி தலைமையிலான ஐந்து உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்குழுவை, மத்திய துறைமுக இலாகா இணைச் செயலர் ராஜேஷ் ஸ்ரீவஸ்த்தவா மற்றும் ராஜிவ் குப்தா, சென்னை துறைமுக தலைவர் சுரேஷ் ஆகிய மூவரும் நேற்று சந்தித்துப் பேசினர். தற்போது மாற்றுப் பாதையாக தனுஷ்கோடிக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் பாதை அமைக்க முடியுமா என்பது குறித்து இந்த நிபுணர்கள் குழு ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளது. மத்திய அரசால் இக்குழு அமைக்கப்பட்ட போது எத்தனை நாட்களுக் குள் இறுதி அறிக்கையை அளிக்க வேண்டுமென்று கூறப்படவில்லை. இருப்பினும் சேதுசமுத்திர திட்டத் தை மாற்றுப் பாதையில் அமைக்க முடியுமா என்பது பற்றி ஆராய்ந்து, தனது இறுதி அறிக்கையை ஓரிரு மாதங்களில் இக்குழு மத்திய அரசிடம் அளிக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நமது டில்லி நிருபர்
http://dinamalar.com/fpnnews.asp?News_id=1589&cls=row4

No comments: