Monday, August 18, 2008

Setu project: secret meeting and survey by Shipping Ministry and other officials


Review of alternative channel in Setusamudram
Tamil daily: Dinamalar, 18 Aug. 2008
A group of Delhi officials visited Dhanushkodi and nearby areas to review the alternative channel and alignment 4 for Setusamudram project. Supreme Court had ordered the review of dredging a channel through in Dhanushkodi sea waters without damaging the shoal banks forming the Rama Setu.
Accordingly, the Centre had ordered such a review by a committee. Many organizations had demanded that while selecting the alternative channel path protection of environment, of aquatic fauna, assurance of the livelihood of fisherfolk had to be ensured. In this context, Revenue and Land Survey department officials are already engaged for the last two days. to survey the land allotted by Tamil Nadu Government consisting of 2,500 acres starting from Rameshwaram temple to Arical (erosion point) Munai of Dhanukodi, for the Setusamudram Project,
To indicate that survey has been done, between Dhanushkodi and Arical Munai, flagposts have been erected. In this situation, officials led by the Secretary of Shipping Minister, Govt. of India, AP Sharma visited the areas from Mandapam using the helicopter of Navy Coast Guard. The areas visited were: Kodanda Ramar temple, Dhanushkodi, Arical Munai.
Later, the team reviewed with the officials the alternative channel 4. Subsequently, the team also visited the sandbanks of Rama Setu in Dhanushkodi sea waters. In this secretly conducted visit and review, Senior official of Setusamudram Corporation, Srinivasa Kannan, Ramanathapuram Collector Kirloshkumar and other officials of different departments participated.
சேது சமுத்திர கால்வாய் மாற்றுப்பாதைக்கு ஆய்வு
ஆகஸ்ட் 18,2008,00:00 IST (Dinamalar, 18 Aug. 2008)
http://img.dinamalar.com/data/images_news/tblSambavamnews_27872866393.jpg
ராமேஸ்வரம்: சேது சமுத்திர கால்வாய் மாற்றுப்பாதை மற்றும் நான்காவது வழித்தடம் குறித்து டெல்லி அதிகாரிகள் குழுவினர் நேற்று தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேது சமுத்திரத் திட்ட கால்வாய் தோண்ட தனுஷ்கோடி கடலில் அமைந்துள்ள ராமர் பாலம் மணல் திட்டுகளைச் சேதப்படுத்தாமல் மாற்று வழிகுறித்து ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி மாற்றுவழியைத் தேர்வு செய்ய சேது சமுத்திரத் திட்ட கழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. மாற்று வழி தேர்வு செய்யப்படும் போது சுற்றுசூழல், கடல் வாழ் உயிரினங்கள், மீனவர்கள் வாழ்நிலை பாதிக்காத வகையில் வழித்தடம் அமைய பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனிடையே ஏற்கனவே சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்காக ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தமிழக அரசு வழங்கிய இரண்டாயிரத்து 500 ஏக்கர் நிலத்தை சர்வே செய்யும் பணியில் வருவாய் மற்றும் நில அளவீட்டுத் துறையினர் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வே செய்த அடையாளத்துக்காக தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை கொடிகளை நட்டு வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று டெல்லியிலிருந்து வந்த மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறைச் செயலர் ஏ.பி.சர்மா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மண்டபத்திலிருந்து கடலோரக்காவல் படைக்குச் சொந்தமான ஹோவர்கிராப்ட் கப்பலில் சென்று கோதண்டராமர் கோவில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரை ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டனர்.
பின் அதிகாரிகளுடன் சேதுக்கால்வாய் தோண்டுவதற்கு மாற்றுப்பாதையான நான்காவது வழித்தடம் குறித்து ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து தனுஷ்கோடி கடலில் ராமர் பாலம் மணல்திட்டு பகுதிகளையும் பார்வையிட்டனர். ரகசியமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்ட கழக பொது மேலாளர் சீனிவாச கண்ணன், ராமநாதபுரம் கலெக்டர் கிர்லோஷ்குமார் உட்பட பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
http://dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=4113&cls=&ncat=TN

No comments: